இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

.இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைக்காக முழுமையாகச் செயற்படுவோம்-பிரித்தானிய தொழிற்கட்சி அறிக்கையில் தெரிவிப்பு

JKR  ஞாயிறு, 2 மே, 2010

United Kingdom flag clipart animated இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படுவதற்கு நாங்கள் முழுமையாக செயலாற்றுவோம் என பிரித்தானிய தொழிற் கட்சியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கு தொழிற்கட்சியின் வேண்டுகோள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை அரசால் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடாத்தப்படுகின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இடம் பெயர்ந்தும் உள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்திருந்தாலும், தமிழ் மக்களின் அமைதிக்கான போராட்டம் இன்னும் நடந்து கொண்டே இருக்கின்றது.
தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை அரசு தனது கொள்கைகளையும், அணுகுமுறைகளையும் மாற்றுவதோடு, தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை மதிக்கவும் வேண்டும். இதுகுறித்து அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து தமிழ் மக்களின் அரசியல் விருப்புகளை நிறைவு செய்வதற்கு கொள்கைகளையும், அணுகுமுறைகளையும் மாற்றுவதோடு, தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை மதிக்கவும் வேண்டும். இதுகுறித்து அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து தமிழ் மக்களின் அரசியல் விருப்புகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஏன் தொழிற்கட்சி?

தொழிற்கட்சியின் முக்கிய பெறுமானங் களான அனைத்துலக தேசியம், சுதந்திரம் மற்றும் சமூக நீதி போன்ற அடிப்படை அம்சங் கள் தமிழ் மக்களின் அடிப்படை அம்சங்களாக அமைகின்றன. அதேவேளை, இப்பெறுமானங்களே இலங் கையில் தமிழ் மக்கள் சுதந்திரத்தையும், அமைதியையும் பெறுவதற்கு முக்கிய அடிப்படை அம்சங்களாக அமைகின்றன.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் நாம் மேற்கொண்ட சில நடவடிக் கைகள் வெற்றி கண்டுள்ளன. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத் தின் கடன் நிறுத்தப்படுவதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான ஏற்றுமதி வரிச்சலுகை தற்காலிகமாக இடை நிறுத்தப் படுவதற்கும் தொழிற்கட்சியின் அழுத்தங்க ளும், புதிய கொள்கைகளும் காரணமாக அமைந்துள்ளன. 2011ம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு தொழிற்கட்சி தெரிவித்த எதிர்ப்பின் காரண மாக, அம்மாநாட்டை அங்கு நடத்துவதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
போர் நடைபெற்ற காலங்களில் இலங்கை மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் நீதியான, சுதந்திரமான விசாரணைகள் நடாத் தப்பட வேண்டும் என்பதை தொழிற்கட் சியின் தேர்தல் அறிக்கை வலியுறுத்தியுள்ளது. தமிழ் மக்கள் நீதியையும், சுதந்திரத்தையும் பெறுவதற்கான நீண்ட பயணத்தில் தொழிற் கட்சி உங்களுடன் தொடர்ந்து தோளுக்குத் தோள் நின்று உழைத்து வரும் என்பதை உறுதி செய்கின்றோம்.
இலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படுவ தற்கு நாங்கள் முழுமையாக செயலாற்று வோம். அத்துடன், பிரித்தானியா தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை மற்றும் நாடு கடந்த அரசு உட்பட பிரித்தானியாவில் இருக்கின்ற எல்லா அமைப்புகளுடனும் இணைந்து, போரின் போது இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக்குடியேற்றுவது, போரினால் சிதைக்கப்பட்ட தமிழர் தாயகத்தை மீளக் கட்டியெழுப்புவது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காண்பதற்கு ஜனநாயக ரீதியில் இவ்வமைப்புகளால் மேற்கொள்ளப்படுகின்ற எல்லா வகையான நடவடிக்கைகளையும் முன் னெடுப்பதற்கு நாம் ஆதரவு வழங்கிச் செய லாற்றுவோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம்.
இந்நிலையில், பிரித்தானியாவில் மட்டு மல்ல இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நலன்களிலும் தொழிற்கட்சி அனைத் துலக அளவில் ஆக்கபூர்வமான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டுமானால், அக்கட்சி ஆட்சிபீடத்தில் மீண்டும் அமரும் வகையில் எதிர்வரும் ஆறாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதன் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டியது உங்களின் கடமையாகும் என மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr