இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இந்திய அன்பளிப்பான 5 பஸ்கள் வவுனியா சேவையில்

JKR  திங்கள், 21 ஜூன், 2010

இந்திய அரசினால் வவுனியா நகரசபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஐந்து புதிய பஸ்களை வவுனியா நகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


வவுனியா சிற்றி சேவையென அழைக்கப்படும் இந்த பஸ் சேவைக்கு ஒரு நாளைக்கென வழங்கப்படும் அனுமதிச் சீட்டு முழுநாளுக்குமே செல்லுபடியாகும்.
குறைந்த கட்டணம் அறவிடப்படும் இந்த பஸ் சேவைக்கான அனுமதிச் சீட்டுகளை வவுனியாவில் அமைந்துள்ள கடைகளில் பெற்றுக்கொள்ளமுடியுமென அரச அதிபர் குறிப்பிட்டார்.
வவுனியா நகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் சில ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் அவர் சொன்னார்.
போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவுள்ள அனைத்துக் கட்டடங்களும் அகற்றப்படுமென மாவட்ட அரச அதிபர் குறிப்பிட்டார்.
இதற்கிணங்க வீதி அபிவிருத்திக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்களை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr