இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜெயபுரம் தேவன்குளம் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிலைமைகளை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் நேரில் சென்று ஆராய்ந்தார்!

JKR  வியாழன், 17 ஜூன், 2010

ஜெயபுரம் தேவன்குளத்தை புனரமைக்க வேண்டும் என ஜெயபுரம் பிரதேச மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களிடம் விடுத்திருந்த கோரிக்கையை அடுத்து தேவன்குளத்தைப் பார்வையிடுவதற்காக ஜெயபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினருடன் சந்திரகுமார் அவர்கள் நேரில் சென்று புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிலைமைகளை நேற்றைய தினம் (16) ஆராய்ந்தார்.   (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
தேவன்குளத்தைப் புனமைப்பதன் மூலம் 600 ஏக்கர் விவசாயச் செய்கையை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் ஜெயபுரத்தில் உள்ள 350 குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் தொழில்களை வழங்கலாம் என கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு. அரசப்பன் தெரிவித்தார்.
கூடிய விரைவில் இக் குளத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதன் மூலம் மக்கள் மீண்டும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்று பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர்
சந்திரகுமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr