இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கையர் உட்பட்ட இரண்டு அகதிப் படகுகள் அவுஸ்திரேலியா சென்றுள்ளன

JKR  வெள்ளி, 18 ஜூன், 2010

இலங்கையர்களும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இரண்டு அகதிப் படகுகள் மேற்கு அவுஸ்திரேலியாவில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள்; தெரிவிக்கின்றன.

குறித்த இரண்டு படகுகளும் 40 நிமிட இடைவெளியில் அவுஸ்திரேலியாவின் மேற்கு கரையை அடைந்ததாக கூறப்படுகிறது.
குறித்த இரண்டு படகுகளிலும் 74 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் இலங்கை அல்லது ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர்களை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த படகுகளில் இந்த வருடத்தில் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்ற 70ம் மற்றும் 71ம் படகுகள் என தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் தற்போது கிரிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்படுகின்றனர்.
இதேவேளை அவர்கள் அனைவரும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானியர் என உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கான அகதி அந்தஸ்த்து வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் மாத்திரம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 278 பேராக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr