இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஆபத்தான நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்

JKR  புதன், 16 ஜூன், 2010

அபாயகரமான நிலைமைகள் மற்றும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவிக்கிறது.
இலங்கையின் நிலைமைகளை மீள ஆராய்ந்த பின்னர் சர்வதேச ஒருங்கிணைந்த இராணுவக்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் பிரியத் பந்துவிக்கிரம கூறினார்.
கடந்த 9 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம் இலங்கைத் துறைமுகத்திற்குள் பிரவேசிக்கின்ற கப்பல்களிடமிருந்து பெறப்படும் காப்புறுதிப் பிணைகளை முற்றாக நீக்கிக் கொள்ளமுடியுமெனத் துறைமுக அதிகார சபையின் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்காரணமாக நாட்டிற்குப் பல்வேறு நன்மைகள் கிட்டுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr