இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

'ரெடி'க்குப் பின்?.. கவலையில் ஆசின்!

JKR  சனி, 17 ஜூலை, 2010

சல்மான் கானுடன் நடித்து வரும் ரெடி படத்தைத் தவிர இந்தியில் வேறு படம் எதுவும் கமிட் ஆகாமல் இருப்பதால் இனி மீண்டும் தென்னிந்தியத் திரையுலகையே நம்பி இருக்க வேண்டி வருமோ என்ற கவலையில் இருக்கிறாராம் ஆசின்.

கிட்டத்தட்ட ஆசினின் பாலிவுட் தேனிலவு முடிவுக்கு வந்து விட்டதாக கூறுகிறார்கள். கஜினி மூலம் பெரும் அலைகளை ஏற்படுத்தினார் ஆசின். ஆனால் சல்மான் கானுடன் சேர்ந்து நடித்த லண்டன் ட்ரீம்ஸ் அவரது கனவுகளைக் கலைத்து போண்டியாக்கி விட்டது.
இதனால் அவரது இந்தி பிரவேசம் பாதியிலேயே அவுட் ஆகும் அளவுக்குப் போனது. இந்த நிலையில் மீண்டும் சல்மான் கானுடன் ரெடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது இந்தியில் வாழ்வா சாவா போராட்டம் போல மாறிப் போயுள்ளது ஆசினுக்கு.
இந்தப் படம் ஓடினால்தான் அவரது இந்தி மார்க்கெட் ஸ்திரப்படும். இல்லாவிட்டால் ராசியில்லாத நடிகையாக்கி விடுவார்கள். தற்போது ஆசின் வசம் புதிய இந்திப் படம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
இதனால் மீண்டும் முழு நேர தென்னிந்திய நடிகையாகி விடும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. இதை மனதில் வைத்துத்தான் விஜய்யுடன் காவல் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஆசின்.
ரெடி, காவல்காதல் இதில் எது பிக்கப் ஆகி பெரிதாக ஓடுகிறதோ அந்த பீல்டுக்கே அதிக கவனம் கொடுக்க அவர் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
ரொம்ப வெவரம்தான்!

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr