இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

லசந்த விக்கிரமதுங்க, வித்தியாதரன், உபாலி, போத்தல, திஸ்ஸநாயகத்திற்கு ஊடக சுதந்திரத்திற்கான விருதுகள்

JKR  வெள்ளி, 23 ஜூலை, 2010

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க, என்.வித்தியாதரன், உபாலி தென்னகோன், போத்தல ஜெயந்த மற்றும் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் ஆகியோர் ஊடக சுதந்திரத்தை பேணுவதற்கு போராடியமைக்காக விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.

இவர்களுக்கு இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஆகியன இணைந்து நடாத்தும் ஊடகத் துறைக்கான அதியுர் விருது வழங்கும் விழாவிலேயே இந்த விருது வழங்கப்படவுள்ளது.
கடந்த வருடம் ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவுக்கு பத்திரிகை சுதந்திரத்தை பேணியமைக்கான விசேட விருது வழங்கப்படவுள்ளது.
இதேவேளை என்.வித்தியாதரன், உபாலி தென்னகோன், போத்தல ஜெயந்த மற்றும் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் ஆகியோருக்கு பத்திரிகை சுதந்திரத்தைப் பேணுவதற்குப் போராடியமைக்காக விருது வழங்கப்படவுள்ளது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து நடத்தும் 11ஆவது விருது வழங்கும் விழா எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr