இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

முதன்முறையாக கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை;உள்ளூர் வைத்தியர்கள் சாதனை

JKR  வியாழன், 1 ஜூலை, 2010

இலங்கையில் முதன் முறையாக கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையைச் செய்து உள்ளூர் வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் மந்திக விஜேரத்ன உள்ளிட்ட குழுவினரே இந்த சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்காக இதுவரை காலமும் சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு பயணிக்க வேண்டிய நிலை இலங்கையர்களுக்கு ஏற்பட்டிருந்தது.
இதற்காக சுமார் 50 இலட்சம் ரூபா வரையில் செலவிட நேர்ந்தது. இந்நிலையில் குறித்த சத்திர சிகிச்சையினை இலங்கையிலேயே மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பினை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர்.
இன்று வெற்றியளித்த இந்த சத்திர சிகிச்சையானது 40 வயதுடைய ஒரு நோயாளிக்கே மேற்கொள்ளப்பட்டது. மூளை செயலிழந்து மீண்டும் வாழவைக்க முடியாத நிலையிலுள்ள நோயாளி ஒருவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கல்லீரல் ஒன்றே மேற்படி நபருக்குப் பொறுத்தப்பட்டுள்ளது.
தீடீர் விபத்தொன்றில் சிக்கி மூளை செயலிழந்த குறித்த நோயாளியின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றன அகற்றப்பட்டன. இந்நிலையிலேயே குறித்த கல்லீரல் மேற்படி 40 வயதுடைய நோயாளிக்கு மாற்று சத்திர சிகிச்சை மூலம் பொற்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr