இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

எம். வி சன் சீ கப்பலை இடைமறிப்பதற்கு காத்திருக்கும் கனடா: பாதுகாப்பு அமைச்சு தகவல்.

JKR  சனி, 31 ஜூலை, 2010


சு மார் 200 இலங்கையர்கள் இருப்பதாக கூறப்படும் எம். வி சன் சீ கப்பலை இடைமறிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கனடாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் அடுத்த வாரமளவில் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா துறைமுகத்தை வந்தடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த கப்பல் சர்வதேச கடற்பரப்பில் பயணிப்பதை தமது கடற்படையினர் அவதானித்துள்ளதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் மெக்கே தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த கப்பல் கனேடிய கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் போது அதனை தடுத்து நிறுத்த தமது கப்பல்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கப்பலில் பயணிப்போரின் உடல்நிலையை கவனிப்பதற்கான ஒழுங்குகளையும் தமது அரசாங்கம் செய்திருப்பதாக மெக்கே தெரிவித்துள்ளார்.
கனடாவுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி இந்தக்கப்பலில் இலங்கையின் பெண்களும் சிறுவர்களும் உள்ளடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவுத்துறை சட்டத்தரணி டக் கெனொன், இந்தக்கப்பல் பயணிகள் தொடர்பில் தகவல் தெரிவிக்கும் போது கப்பலில் பயணிப்போர் அடைக்கலம் கோரும் அகதிகளாகவே இருப்பர் என எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் படையினரால் கடந்த காலங்களிலும் தற்போதும் குற்றம் சுமத்தப்படுகின்றவர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அல்லது மோசமான முறையில் நடத்தப்படுகின்றனர்.
எனவேதான் அவ்வாறான மக்கள் பயந்த நிலையில் வேறு நாடுகளில் அடைக்கலம் கோருகிறார்கள் என டக் கெனொன் தெரிவித்துள்ளார்.
கெனொன் கடந்த ஒக்டோபர் மாதம் கனடாவுக்கு ஓசியன் லேடி கப்பலில் வந்த இலங்கையர்களுக்காக ஆஜரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr