.இச்சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் போலி அடையாள அட்டைகளைக் காண்பித்து, ரயிலில் பயணம் செய்யும் தமிழர்களை தெரிவு செய்து அவர்களிடம் பணம் நகைகளை கொள்ளையிட்டு வந்துள்ளனர். பல விசேட பொhலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
வேயாங்கொடை மற்றும் கட்டானை ஆகிய இடங்களில் வைத்து இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொல்காவெல, மீரிகம, வெயாங்கொடை, ராகம மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் இச்சந்தேக நபர்கள் இக்கொள்ளைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக