இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பிரபா கணேசன் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைக்கு ஏகமனதாக அங்கீகாரம்

JKR  செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

அரசுடன் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தொடர்பில் தலைவர் மனோ கணேசனும், பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரனும் இணைந்து எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு கட்சியின் அரசியற்குழு ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளது.
அதேவேளையில் பிரபா கணேசன் எம்பி வகித்துவந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு மேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.ராஜேந்திரனும், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் நிதிச்செயலாளர் பதவிக்கு மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளி ரகுநாதனும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியற்குழு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணிவரை கட்சித் தலைமையகத்தில் தலைவர் மனோ கணேசனின் தலைமையில் அரசியற்குழு கூட்டம் நடைபெற்றது.
பிரபா கணேசன் மீதான கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம், நேற்று முதல் 14ஆவது நாளான எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முதல் அரசிலிருந்து வெளியேற வேண்டும் என்ற அறிவுறுத்தல், அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறும்விதத்தில் அரசுடன் இணைந்து ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என்ற அறிவுறுத்தல், ஒழுங்கு நடவடிக்கை தொடர்பிலான 10 உறுப்பினர்கள் அடங்கிய ஒழுக்காற்றுக்குழு ஆகியவை தொடர்பில் கட்சித் தலைவர் மனோ கணேசனும், பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரனும் எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் அரசியற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரித்தனர்.
இதைத் தொடர்ந்து பிரபா கணேசனின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு மேல்மாகாணசபை உறுப்பினர் எஸ்.ராஜேந்திரனின் பெயரை தலைவர் மனோ கணேசன் பிரேரிக்க, குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. அதேபோல் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் நிதிச்செயலாளர் பதவிக்கு மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளி ரகுநாதனின் பெயரை பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் பிரேரிக்க, குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.
பிரபா கணேசனுக்கு கட்சி விடுத்துள்ள அறிவுறுத்தல்கள் தொடர்பில் எதிர்வரும் 14 நாட்களுக்குள் ஒழுக்காற்றுக்குழு கண்காணித்து நடவடிக்கை எடுத்து அரசியற்குழுவுக்குச் சமர்பிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியற்குழுவின் 25 உறுப்பினர்களில் பிரபா கணேசனையும் மற்றும் சுகவீனமுற்றுள்ள இரண்டு உறுப்பினர்களையும் தவிர 22 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டு தலைவர் மனோ கணேசனுக்கு தங்களது உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தில் தலைவர் மனோ கணேசனுடன் பொதுச்செயலாளர் நல்லையா குமரகுருபரன், மாகாணசபை உறுப்பினர்கள் எஸ்.ராஜேந்திரன், முரளி ரகுநாதன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள் கங்கை வேணியன், எப்.எம்.ஷியாம், ஜதொகா பொதுச்செயலாளர் லே.பாரதிதாசன், உபதலைவர் ஏ.ஜெயபாலன், நிதிச்செயலாளர் எஸ்.கணேஷன், உதவி நிதிச்செயலாளர் வி.முரளிதரன் மற்றும் கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை, கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களை அரசியற்குழுவில் பிரநிதிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr