. யாழ். கல்வியங்காட்டைச் சேர்ந்த விஜயகுமார் சதீஸ்குமார் மற்றும் நெடுந்தீவைச் சேர்ந்த க.கலாவதனா ஆகியோரே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடமிருந்து சைக்கிள்களைப் பெற்றுக் கொண்டவர்களாவர். பாடசாலை செல்லும் மேற்படி மாணவர்கள் இருவரும் படிப்பில் திறமை காட்டிவருவதுடன் சகோதர சகோதரிகளையும் கொண்டுள்ளனர். ஆயினும் போக்குவரத்து செய்வதற்கு தமக்கென சைக்கிள் இல்லாத நிலையில் தத்தமது பிரதேச ஈ.பி.டி.பி. பொறுப்பாளர்கள் ஊடாக மேற்படி வேண்டுகோளை விடுத்திருந்தனர்.
இவ்வேண்டுகோளின் பேரில் கூடிய கவனம் செலுத்திய தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதி ஊடாக இரு புதிய சைக்கிள்களை அம்மாணவர்களுக்கு கையளித்ததுடன் படிப்பில் மேலும் கவனம் செலுத்தவேண்டுமென ஊக்கப்படுத்தினார். தமக்கு சைக்கிள்களைப் பெற்றுத்தந்தமைக்காக அம்மாணவர்கள் தமது மனமார்ந்த நன்றிகளை தமது குடும்பத்தினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.



























0 கருத்துகள்:
கருத்துரையிடுக