இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கைத் தமிழர்கள் ஆஸி. நீதிமன்றில் மேன்முறையீடு

JKR  செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

து அரசியல் புகலிடக் கோரிக்கையை நிராகரிக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலணை செய்யுமாறு அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றத்தில் இலங்கைத் தமிழர்கள் இருவர் இன்று மேன்முறையீடு செய்துள்ளனர்.
அத்துடன், தமது புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வெளியே வைத்து கையாளப்படுவது நியாயமற்றது எனவும் அவர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
கடந்த வரும் ஒக்டோபர் மாதம் முதல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இவ்விருவரும் இலங்கைக்கு நாடுகடத்தப்படும் நிலையை எதிர்நோக்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தாம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டு காரணமாக இலங்கையில் தமக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என மேற்படி நபர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, புகலிடம் கோரும் தமிழர்களுக்கும் ஈராக்கிற்கு நாடுகடத்தப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கும் ஆதரவு தெரிவித்து சுமார் 40 பேர் சிட்னி நகரிலுள்ள நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr