இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கே.பிக்கு பொது மன்னிப்பு வழங்க அரசு தீர்மானம்- டில்வின் சில்வா

JKR  ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

 ரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலின் மூலமுமான கே.பிக்கு பொது மன்னிப்பு வழங்க அரசு தீர்மானம் செய்துள்ளதாக டில்வின் சில்வா தெரிவிக்கிறார்.

பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பி. யின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சில்வா இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கே.பி மீது குற்றங்கள் எதனையும் சுமத்தாது அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடும் டில்வின் சில்வா, இதன் மூலம் கே.பிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஓர் இரகசிய உடன்படிக்கை உள்ளமை தெளிவாவதாகவும் கூறினார்.
கைது செய்யப்பட்டு சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கே.பி.யின் சொத்துக்கள் சட்டப்படி அரச உடமையாக்கப் பட்டிருக்க வேண்டும் என குறிப்பிடும் அவர், ஆனால் இதுவரையில் அவரது சொத்துக்கள் அரச உடமையாக்கப்படவில்லை எனவும் கூறினார்.
எனவே அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட வேண்டும், அப்படி ஆஜர்படுத்தப்படுவாரானால் அவரின் சொத்துக்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் வெளிவரும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் அவருக்கு சொந்தான சொத்துக்களை கைமாற்றிக் கொண்டதன் அடிப்படையிலேயே அவர் சுதந்திரமாகவும், சகலவசதிகளுடனும் கவணிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr