இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சிறுத்தை தாக்கியதால் சிறுமி காயம்

JKR  செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

சிறுத்தை ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளாகிய 9 வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்த நிலையில்
நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார். நாவலப்பிட்டி இம்புல்பிட்டிய தோட்டத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்தச்சம்பவம் இடம் பெற்றுள்ளது
.
சிறுத்தைப் புலியின் தாக்குதலுக்கு உள்ளான இந்தச் சிறுமி தனது சித்தியுடன் குளிக்கச் சென்று திரும்பிக்கொண்டிருந்த போது திடீரென வந்த சிறுத்தை ஒன்று சிறுமி மீது பாய்ந்து தாக்கியுள்ளது.
இதன் போது சிறுமியின் சித்தி வீறிட்டுக் கதறவே சிறுத்தை தப்பிச் சென்றுள்ளது. சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளாகிய சிறுமியின் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தச்சம்பவத்தில் இம்புல்பிட்டிய தோட்டத்தைச் சேர்ந்த ஒன்பது வயதான ரூபிக்கா என்ற சிறுமியே பாதிக்கப்பட்டவராவார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr