இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கள்ளக் காதல் கதை: நடிகை அனகாவுக்கு கொலை மிரட்டல்

JKR  செவ்வாய், 7 செப்டம்பர், 2010

மவெளி படத்தில் மாமனாருடன் கள்ளக் காதலில் ஈடுபடும் மருமகள் கேரக்டரில் நடித்த அனகாவுக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது
.நாடோடிகள், கோரிப்பாளையம் ஆகிய படங்களை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள படம் சிந்து சமவெளி. மாமனார், மருமகள் இடையிலான கள்ளக் காதலை மையமாகக் கொண்ட விவகாரமான இந்தப் படத்தை சாமி இயக்கியுள்ளார்.
இதையடுத்து சாமிக்கும் தயாரிப்பாளருக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன. இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு சாமியின் சென்னை வீட்டின் மீது தாக்குதல் நடந்தது. அவரது கார் உடைத்து நொறுக்கப்பட்டது.
இந் நிலையி்ல் இந்தப் படத்தில் மருமகளாக நடித்த அனகாவுக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது.
அவர் கூறுகையி்ல், எனக்கு பலரிடமிருந்தும் தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்ப்பதற்காக, சென்னையில் உள்ள மினி உதயம் தியேட்டருக்கு சென்று இருந்தேன். அப்போது சில பெண்கள் என்னை திட்டினார்கள்.
மேலும் கடந்த 2 நாட்களாக, போனிலும் மிரட்டல்கள் வருகின்றன. தமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் மாமனார்-மருமகள் இடையே கள்ள உறவு இருப்பது போன்ற கதையில் நடித்த உன்னை தீர்த்துக்கட்டி விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.
நான் ஒரு நடிகை. டைரக்டர் எப்படி நடிக்க சொல்கிறாரோ, அப்படி நடிக்கிறேன். மாமனார்-மருமகள் இடையே உறவு இருப்பது போல் கதை அமைந்திருந்தாலும், அந்த உறவினால் ஒரு குடும்பமே அழிந்து போவது போலத் தான் படத்தில் காட்டியிருக்கிறார்கள் என்றார்.
இவருக்கு உண்மையிலேயே மிரட்டல் வந்ததா அல்லது இது படத்தை ஓட வைக்க நடத்தப்படும் 'பப்ளிசிட்டி ஸ்டண்டா' என்று தெரியவில்லை.
அமலா பால் என்ற பெயரில் வீரசேகரன் படத்தில் அறிமுகமானவர் தான் இந்தப் படத்தில் தனது பெயரை அனகா என்று மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr