இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புதிய அரசியலமைப்புத் திருத்தங்கள் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்துகின்றன: அமெரிக்கா

JKR  சனி, 11 செப்டம்பர், 2010

லங்கையின் அரசியலமைப்பில் செய்யப்பட்டுள்ள புதிய திருத்தங்களை அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. இத்திருத்தங்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாக அமெரிக்கா இன்று கூறியுள்ளது.
ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான கட்டுப்பாட்டை நீக்குவதுடன் பொலிஸ், நீதிச்சேவை, தேர்தல் ஆணைக்குழு முதலானவற்றுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கும் ஜனாதிபதிக்கு பரந்த அதிகாரத்தை வழங்கும் அரசியலமைப்புத் திருத்தம் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
"இத்திருத்தங்கள் சமநிலைத் தன்மையை பலவீனமாக்குவதுடன் அரசியலமைப்பு ஜனநாயகத்தின் கொள்கைகளை பலவீனப்படுத்தவதாகவும் உள்ளமை குறித்து அமெரிக்கா கரிசணை கொண்டுள்ளது" என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பி.ஜே. கிராவ்லி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
சுயாதீன நிறுவனங்களை பலப்படுத்துமாறும் வெளிப்படைத்தன்மையையும் தேசிய நல்லிணக்கத்தையும் அதிகரிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை கிராவ்லி கோரியுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr