இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நீதிமன்றத்தில் வேடுவத் தலைவர்

JKR  ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

காணிக்கான ஏகபோக உரிமையுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான எழுத்துமூல ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு றதுகலை வேடுவத் தலைவருக்கு மொனராகலை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
.இந்த மாதம் 29ஆம் திகதிக்குள் எழுத்துமூலமான ஆவணத்தை றதுகலை வேடுவ சமூகம் நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
றதுகலையில் தமது சமூகத்திற்குச் சொந்தமானதென வேடுவத் தலைவர் கூறும் காணிக்கு உரிமை கோரி கண்டியை வசிப்பிடமாகக் கொண்ட ஒருவர் மொனராகலை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையின்போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலத்தில் தனது தந்தை மற்றும் தனது முன்னைய சமூகத்தினர் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த நிலம் தமக்கே சொந்தமாகும் எனவும் றதுகலை வேடுவ சமூகத் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr