இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வடபகுதி மக்களின் வளமான எதிர்காலத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றி வரும் பங்களிப்பு அளப்பெரியது - அமைச்சர் பௌஸி!

JKR  திங்கள், 13 செப்டம்பர், 2010

டபகுதி மக்களின் வளமான எதிர்காலத்திற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றி வருகின்ற பங்கு பணிகள் அளப்பரியவை என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
யாழ் போதனா வைத்தியசாலையில் தொண்டர் சேவை அடிப்படையில் பணிபுரிந்தவர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்குவது தொடர்பான நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்கள் நலன்சார்ந்து எடுத்துவரும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் அவர் முன்னெடுக்கவுள்ள பல்வேறு செயற்திட்டங்களுக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றோம்.
இங்குள்ள மக்களது எதிர்கால வளமானது சுபீட்சமான வாழ்வுக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றி வரும் பணிகள் அளப்பரியவையாகவே உள்ளன.
அத்துடன் எனது அமைச்சினூடாகவும் உங்களுக்கும் உதவி செய்யத் தயாராக இருக்கின்றேன் என்றும் பௌஸி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் யாழ் மாநகர சபை ஆணையாளர் சரவணபவ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr