இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அயித்தாம்புலம் குடிநீர் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.

JKR  செவ்வாய், 14 செப்டம்பர், 2010

யாழ்.தீவகம் ஊர்காவற்றுறை அயித்தாம்புலம் கிராம முன்னேற்ற பகுதிக்கான குடிநீர் விநியோகத்திட்டத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இப்பகுதி மக்களின் நீண்டநாள் தேவையான இக்குடிநீர் விநியோகத்திட்டமானது அம்மக்களின் கோரிக்கையின் பேரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சி காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுமாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அயித்தாம்புலம் கிராம முன்னேற்ற சங்கத்தலைவர் சண்முகம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாக பங்குகொண்டதுடன் ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் சிறிமோகனன் தீவக பொலிஸ் அத்தியட்சகர் பிரேமரட்ண நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரி தவேந்திரன் கரம்பொன் மேற்கு கிராம உத்தியோகத்தர் பாலசுந்தரம் யாழ். மாவட்ட ஈபிடிபி அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் ஊர்காவற்றுறை பொறுப்பாளர் காந்தன் மாதர் சங்கத்தலைவி சித்திரா உள்ளிட்ட பெருந்தொகையான கிராம மக்கள் பங்குகொண்டனர்.

இந்நிகழ்வில் சம்பிரதாயபூர்வமாக குடிநீர் விநியோக செயற்பாட்டை அங்கு திரண்டிருந்த பொதுமக்களின் கரகோஷத்திற்கு மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தமை விசேட அம்சமாகும். இக்குடிநீர் விநியோக திட்டத்தின்மூலம் அயித்தாம்புலம் கிராம முன்னேற்ற முன்பள்ளி சிறார்களுக்குரிய நீண்டநாள் தேவையான குடிநீர் வழங்கலும் நிறைவேற்றப்பட்டுள்ளமை மற்றுமோர் விடயமாகும்.









0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr