இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

குத்துச்சண்டையில் இலங்கைக்கு தங்கப்பதக்கம்

JKR  புதன், 13 அக்டோபர், 2010

19ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவின் குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை வீரர் மஞ்சு வன்னியாரச்சி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்
.புதுடில்லி நகரில் சற்றுமுன் நிறைவடைந்த இறுதிப்போட்டியில் வீரர் பொட்ஸ்வானா வீரர் டிராபெவலோ சியோகோவை 30 வயதான மஞ்சு வன்னியாராச்சி தோற்கடித்தார்.
பொதுநலவாய குத்துச்சண்டைப் போட்டியில் 1950 ஆம் ஆண்டின்பின்னர் இலங்கை பதக்கம் பெறுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
19 ஆவது பொது நலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது தங்கப்பதக்கம் இதுவாகும்.
இவ்விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் பளுதூக்குதல் போட்டியில் சிந்தன விதானகே வெள்ளிப் பதக்கமொன்றையும் சுரேஷ் பீரிஸ் வெண்கலப் பதக்கமொன்றையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr