இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வடமராட்சி கிழக்கு புதுக்காட்டு மாசார் பகுதிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம்

JKR  ஞாயிறு, 31 அக்டோபர், 2010

யாழ் வடமராட்சி கிழக்கு புதுக்காட்டுப் பகுதிக்குச் சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப்பகுதி வர்த்தக நிலைய உரிமையாளர்களுடனும் பொதுமக்களுடனும் கலந்துரையாடினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இதன் போது மீள்குடியேறிவரும் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.

இதேவேளை வடமராட்சி மாசார் பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்அங்குள்ள வர்த்தக உரிமையாளர்களுடனும் பொதுமக்களுடனும் கலந்துரையாடினார்.

இதன்போது நீண்டகாலத்தின் பின்னர் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறி வரும் மக்கள் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகளையும் கேட்டறிந்து கொண்டார்.

இதனிடையே மாசாரிலுள்ள பளை பச்சிலைப்பள்ளி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சென்ற அமைச்சர் அவர்கள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதான சகல விதமான பொருட்களும் இருக்கின்றதா எனக் கேட்டுக்கொண்டதுடன் மக்களுக்குத் தேவையான பொருட்களை உடனுக்குடன் பெறப்பட்டு விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் சங்கத்தின் முகாமையாளரிடம் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr