இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மன்னிப்பு கோரும் சாத்தியத்தை அனோமா நிராகரிப்பு

JKR  வெள்ளி, 1 அக்டோபர், 2010

னது கணவர் மன்னிப்பு கேட்கும் சாத்தியத்தை அனோமா பொன்சேகா நிராகரித்தார். தனது கணவரின் தண்டனையை நீக்குவதற்கு அரசாங்கம் எதை எதிர்பார்க்கின்றது என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்
.பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மேல் முறையீடு செய்தால் தண்டனையை நீக்குவது பற்றி அரசாங்கம் கவனத்திற் கொள்ளும் என கூறியதை கருத்தில் கொண்டே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேல் முறையீட்டு என்பதால் கருதப்படுவது யாதென தெளிவாக அவர் கூற வேண்டும் என இன்று மாலை தனது கணவனை வெலிக்கடை சிறைச்சாலையில் பார்த்து விட்டு வந்து ஊடகவியலாளர்களுடன் பேசும் போதே அவர் தெரிவித்தார்.
சரத் பொன்சேகாவின் தேசிய உடையை கையில் வைத்திருந்த அவர், எனது கணவரின் ஞாபகமாக இது மட்டுமே தற்போது உள்ளது என கண்ணீர் மல்க கூறினார்.
சரத் பொன்சேகாவை அரசியல் கைதிகளை வைத்திருக்கும் கூடத்தில் வைத்திருப்பதாக ஊடகவியலாளர்களுக்கு கூறப்பட்டது.
அவரது கூடம் நுளம்பு நிறைந்ததாக உள்ளது. படுப்பதற்கு கன்வஸ் பாய் மட்டுமே இருப்பதாக அனோமா பொன்சேகா கூறினார்.
ஏனைய கைதிகள் போன்று இவருக்கு ஒரு எண் வழங்கப்பட்டதா என கேட்கப்பட்ட போது, தனக்கு அது தெரியாது என்றார் அவர்.
ஒரு போர்வை , இரண்டு துவாய்கள், ஒரு தலையணை உறை என்பவற்றை அனோமா தனது கணவருக்கு வழங்க அனுமதிக்கப்பட்ட சில பொருட்களில் அடங்கும் எனத் தெரியவருகின்றது.
நாட்டை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து பாதுகாத்த எனது கணவருக்கு வெகுமதி கிடைத்துள்ளது. எனது கணவரை இப்படி நடத்துமளவுக்கு கொடுமைக்காரராக ஒருவர் இருக்க முடியும் என என்னால் கற்பனையில் கூட நினைக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr