இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வடமராட்சி கிழக்கு செந்தமிழ் முன்பள்ளி திறப்பு விழா..!

JKR  வியாழன், 21 அக்டோபர், 2010

மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள வடமராட்சி கிழக்கில் மழலைக் குழந்தைகளுக்கான செந்தமிழ் முன்பள்ளி போரூட் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றைய தினம் (20) உடுத்துறை 10ம் வட்டாரத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் மங்கல விளக்கினை ஈ.பி.டி.பி. வடமராட்சி அமைப்பாளரும் பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தலைவருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் ஏற்றி வைத்தார். செந்தமிழ் முன்பள்ளியின் பெயர்ப்பலகையை வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் பணிமனை தலைமைக் கிராம அலுவலர் திரு ரவிக்குமார் அவர்களும் உடுத்துறை பிரதேச இராணுவ அதிகாரி மேஜர் ஆனந்த் அவர்களும் திரை நீக்கம் செய்து வைத்தனர். பின்னர் வைபவரீதியாக நாடா வெட்டப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி. தொடர்பாளர் இரத்தினசிங்கம் சதீஸ் உடுத்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினர் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் கிராமசேவகர் முன்பள்ளி ஆசிரியைகள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr