.கரையொதிங்கிய சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று கரையொதிங்கியிருந்தது. அப்பெண் ரோஸ் நிறத்திலான சல்வார் அணிந்திருந்ததுடன் கால்விரலில் மிஞ்சியும் அணிந்திருந்தார். இதிலிருந்து அவர் ஒரு தமிழ்ப் பெண்ணாக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.
இந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் உறுதியாக கூறமுடியாதுள்ளது என தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக