அத்துடன் தமிழ் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதான இலங்கை அரசின் பணிகள் மத்திய அரசுக்கு திருப்தி அளிக்கிறதா? என்றும் இலங்கை தமிழர்களுக்கான சம உரிமை வழங்க வகை செய்யும் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த இலங்கை அரசு தயாராக உள்ளதா? என்றும் அவர் மேலும் கேட்டுள்ளார்.
அவருடைய கேள்விகளுக்கு பதிலளித்துள்ள மத்திய வெளிவிவகார இணையமைச்சர் பிரனீத் கவுர், "இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு இந்திய அரசு முன்வந்துள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள், முகாம்களில் உள்ள அனைத்து தமிழர்களும் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு விடுவர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதி அளித்துள்ளார்" என்றார்.
அத்துடன், "தமிழர் அமைப்புகள் மற்றும் ஏனைய தரப்பினரையும் இணைத்து, அதிகார பரவல் குறித்து இலங்கை அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் இந்தியா வந்த ஜனாதிபதி மஹிந்த, அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசியல் தீர்வு காண முயற்சி எடுப்பதாக இங்திய அரசிடம் உறுதியளித்தார்" என்றும் இணையமைச்சர் பிரனீத் கவுர் கனிமொழி எம்.பி.யின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக