இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அக்கரைப்பற்று பிரதேசத்தில் விவசாயி ஒருவரின் சடலம் மீட்பு

JKR  திங்கள், 15 நவம்பர், 2010

க்கரைப்பற்று, அலங்குளம் பிரதேசத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் விவசாயி ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சென்றல் கொலேஜ் வீதி, அக்கரைப்பற்று 20ஐச் சேர்ந்த ஆதன் லெப்பை (வயது 55) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

வழமைப்போல் வயலுக்குப் புறப்பட்டுச் சென்ற இவர், மாலை வரை வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே மேற்படி நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவரின் தலையின் பின்புறத்தில் பலத்த காயமொன்று இருப்பதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr