இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நெடுந்தீவு கடலில் தத்தளித்த இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

JKR  புதன், 3 நவம்பர், 2010

நெடுந்தீவிலிருந்து வடமேற்குக் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் பதினொரு பேரை கடற்படையினர் மீட்டதாக கடற்படையின் பேச்சாளர் கப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.

குறித்த மீனவர்கள் பயணித்துக்கொண்டிருந்த மூன்று படகுகளின் என்ஜின்கள் செயலிழந்த நிலையில் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்த போதே கடற்படையினரால் மீட்கப்பட்டதாகவும் அவர்களது படகுகள் கடற்படையினரால் இழுத்துச் செல்லப்பட்டு நெடுந்தீவில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் கூறினார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து குறித்த மீனவர்கள் பயணித்த படகுகள் கடற்படையினரால் திருத்தப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr