இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜனாதிபதியுடனான சந்திப்பு திருப்தியளிக்கவில்லை: சிவாஜிலிங்கம்

JKR  வெள்ளி, 26 நவம்பர், 2010

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ் கட்சிகளின் அரங்கத்திற்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமானது என்று கூற முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான  16 பேர் கொண்ட தமிழ் கட்சிகளின் அரங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நண்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இச்சந்திப்பு சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் தொடர்ந்து இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது தமிழ் மக்களின் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் என்பவை உள்ளடங்கிய 8 அம்சங்களை கொண்ட மகஜரொன்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டதாக தமிழ் தேசிய விடுதலை முன்ணனியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.


  

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr