இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பொது விடயங்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடல்

JKR  திங்கள், 8 நவம்பர், 2010

பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பொது விடயங்கள் உள்ளடங்கிய அரச அதிகாரிகளின் சந்திப்புக்கள் என்பவற்றில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்குகொண்டார்.

இன்றைய தினம் நண்பகல் முதல் அமைச்சரவர்களின் யாழ். பணிமனையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்புக்களில் பெருமளவிலானோர் பங்குகொண்டனர். இதில் யாழ். மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் வடமராட்சி வலிகாமம் தென்மராட்சி தீவகம் ஆகியவற்றின் கொத்தணி நிர்வாகிகள் சமாசத் தலைவர் சிவலிங்கம் தலைமையில் அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடினார்கள். அவர்களின் கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்திய அமைச்சரவர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் வலிகாமம் கிழக்கு வலிகாமம் மேற்கு பருத்தித்துறை வலிகாமம் தெற்கு ஆகிய பிரதேச செயலர்கள் உட்பட மதுவரித் திணைக்கள ஆணையாளரும் பங்குகொள்ளும் முகமாக பிறிதொரு கலந்துரையாடல் ஒன்றை நடாத்தி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். இச்சந்திப்பின்போது பனை அபிவிருத்தி சங்க தலைவர் பசுபதி சீவரட்ணமும் உடனிருந்தார்.

மேலும் தமது தேவைகள் குறித்த கோரிக்கைகளுடன் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் மீளக்குடியேறிய மக்களும் அமைச்சரவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்கள். குறிப்பாக தமது பிரதேசத்திற்கான மின்சார விநியோகம் வெள்ளத்தடுப்பு அணை அமைத்தல் மருதங்கேணி பாடசாலை அபிவிருத்தி கல்வி நிலைய மேம்பாடு போக்குவரத்து வசதிகள் ஆகியவை குறித்த தேவைகளை அவர்கள் எடுத்துரைத்தனர். இவ்விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சரவர்கள் தான் நேரடியாகவே வடமராட்சி கிழக்கிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து வந்து அம்மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார். இச்சந்திப்பின்போது ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி அமைப்பாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரனும் உடனிருந்தார்.

இதேவேளை யாழ். போதனா வைத்தியசாலை குறித்த கோரிக்கைகளுடன் அதன் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி பசுபதிராஜா மற்றும் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரவிராஜ் ஆகியோர் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

மற்றொருபுறம் யாழ். குருநகரில் முன்னர் அரச வடிசாலை அமைந்திருந்த பகுதி முன்னைய உயர் நீதிமன்ற வளாகம் உயர் தொழில் நுட்ப கல்லூரிக்கு முன்பாகவுள்ள பகுதி ஆகியவற்றில் வசித்து வரும் மக்களும் நாவாந்துறை சூரியவெளி கொட்டடி முத்தமிழ் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரதிநிதிகளும் அமைச்சரைச் சந்தித்து தமது குடியிருப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்கள். இவ்விடயம் தொடர்பாகவும் அம்மக்களுக்குரிய குடியிருப்பு மற்றும் வீடமைப்பு வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் முகமாகவும் உரிய அதிகாரிகளிடமிருந்து ஆவணங்களையும் அறிக்கைகளையும் பெற்று தகுந்த தீர்வினைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்த அமைச்சரவர்கள் இவ்விடயத்தில் தமக்கு சிறிய கால அவகாசம் தேவை எனவும் கேட்டுக்கொண்டார். மேற்குறிப்பிட்ட பிரதேச மக்களுடனான சந்திப்பின்போது யாழ். மாநகர பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோவும் உடனிருந்தார்.
பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பொது விடயங்கள் உள்ளடங்கிய அரச அதிகாரிகளின் மேற்படி சந்திப்புக்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ். பிரதேச செயலாளர் சுகுணரதி தெய்வேந்திரம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் என்.திருலிங்கநாதன் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் முரளிதரன் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா இலங்கை மின்சார சபையின் வடபிராந்திய பிரதிப் பொது முகாமையாளர் முத்துரட்ணானந்தசிவம் வடபிராந்திய இலங்கைப் போக்குவரத்து சபை பிரதிப் பொது முகாமையாளர் கணேசமூர்த்தி யாழ். மாநகர ஆணையாளர் மு.சரவணபவ சட்டத்தரணி தே.ரெங்கன் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சந்திப்புக்களின் நிறைவாக யாழ். மாநகர அபிவிருத்தி மேம்பாடு தொடர்பாகவும் மேற்படி அரச உயர் அதிகாரிகளுடனும் புத்திஜீவிகளுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடலை மேற்கொண்டதோடு ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.





















0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr