இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வாசுதேவ நாணயக்கார புதிய அமைச்சினைப் பொறுப்பேற்றுக்கொண்டார்

JKR  செவ்வாய், 30 நவம்பர், 2010

பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சராக நியமனம் பெற்றதன் பின்னர் இன்றைய தினம் கொழும்பு இராஜகிரியையில் உள்ள மேற்படி அமைச்சில் தனது அமைச்சுப் பொறுப்புக்களை பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.
இதன் போது அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா தினேஸ் குணவர்தனா ஏ.எச்.எம். பௌசி டி.யூ குணசேகர உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய அமைச்சினைப் பொறுப்பேற்றுள்ள வாசுதேவ நாணயக்கார அவர்களுக்கு அவரது நெருங்கிய நண்பரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது கட்சி சார்பாகவும் தமிழ் மக்கள் சார்பாகவும் தனது பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr