.இதனையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவனிடம் இருந்து பொலிஸார் சிறுபிள்ளைகள் அணியும் தோடு மற்றும் ஒரு தொகைப் பணம் என்பவற்றை கைப்பற்றியுள்ளார்கள். தற்போது பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சிறுவன் மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற பல்வேறு சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் சுன்னாகத்தில் சைக்கிள் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்க்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபரிடம் இருந்து ஆறு சைக்கிள்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட நபர் புத்தூரைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது























0 கருத்துகள்:
கருத்துரையிடுக