இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சுன்னாகம் புகையிரத நிலையத்திலிருந்த 29 குடும்பங்கள் வேறிடங்களுக்கு மாற்றம்

JKR  வியாழன், 9 டிசம்பர், 2010

டபகுதிக்கான ரயில் பாதை அமைக்கும் முகமாக, சுன்னாகம் ரயில் நிலையத்தில் குடியிருந்த 29 குடும்பங்கள் அங்கிருந்து வேறிடங்களுக்கு நேற்றுமுன் தினம் மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்த இம்மக்கள், சுன்னாகம் ரயில் நிலையக் கட்டிடத்தில் அமைக்கப்பட்ட நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்தனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் ரயில் நிலையத்தில் குடியிருக்கும் மக்களை வேறிடங்களுக்கு மாற்றுமாறும் ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரயில் நிலையத்தில் தங்கியிருந்த குடும்பங்களில் சிலர் மீளக்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியான கட்டுவனுக்கு சென்றுள்ள அதேவேளை, ஏனையவர்களில் 10 குடும்பங்கள் தமக்கென பல லட்சம் ரூபாய்கள் செலவில் சொந்தக் காணிகளை கொள்வனவு செய்து சென்றுள்ளனர். இன்னும் ஒரு பகுதியினர் அளவெட்டி மற்றும் மல்லாகம் பகுதிகளிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான வீடுகள் மற்றும் குழாய்க்கிணறுகளை அமைப்பதற்கு தேவையான உதவிகளை அகதிகளுக்கான ஜக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் வழங்க முன்வந்துள்ளன.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் ரயில்;ப் பாதை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் தற்போது, ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுன்னாகம் ரயில்; நிலையப் பகுதியில் ரயில்ப் பாதை, ரயில் நிலையம் ஆகியன அளவிடப்பட்டு மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும், யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் ரயில்ப் பாதையை அண்டிய குடியிருப்புகள், கடைகள், கட்டிடங்கள் ஆகியன அகற்றப்படாது இருக்கிறது.
கடந்த தை மாதம் ரயில்ப் பாதை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr