இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

50 ஆவது சதத்தை கடந்தார் சச்சின்

JKR  ஞாயிறு, 19 டிசம்பர், 2010

ந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 50 ஆவது சதத்தை சற்றுமுன் பூர்த்தி செய்தார்.

சென்சூரியனில் நடைபெறும் தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் சற்றுமுன் 100 ஓட்டங்களைப் பெற்றார் டெண்டுல்கர்.
37 வயதான டெண்டுல்கர் பங்குபற்றும் 175 ஆவது டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்டத்தில் உலகில் அதிக சதங்களை குவித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் விளங்குகிறார். அவருக்கு அடுத்ததாக அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங் 39 டெஸ்ட் சதங்களையும் தென்னாபிரிக்காவின் ஜக் கலிஸ் 38 சதங்களையும் பெற்றுள்ளனர்.
1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சி நகரில் நடைபெற்ற போட்டி மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமான அவர் 1990 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மன்செஸ்டரில் நடந்த போட்டியில் தனது முதலாவது டெஸ்ட் சதத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr