இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

5 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்து பல கொலைகளை மேற்கொண்ட பாதாள உலகத் தலைவன் கைது

JKR  செவ்வாய், 28 டிசம்பர், 2010

5கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்து பல கொலைகளை மேற்கொண்டு வந்த பாதாள உலகத் தலைவனை அளவத்துகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலை குற்றத்துக்காக கொழும்பு பொலிஸ் நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கூண்டின் கூரையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த போதே பொலிஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கையளிக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர், கொழும்பில் மிகப் பிரபலமான சீனி முதலாளி என்றழைக்கப்படும் முருகேசு என்ற வியாபாரியை 25 இலட்சம் ரூபா ஒப்பந்த அடிப்படையில் கொலை செய்துள்ளான்.
அத்துடன் கொழும்பில் பணப் பரிமாற்றம் செய்யும் இடம் ஒன்றிலிருந்து இரண்டரை கோடி ரூபாய்களை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 50 ற்கும் மேற்பட்ட வாகனங்கள் கொள்ளையடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr