இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

82 வயதான குங்பூ வீராங்கனை

JKR  செவ்வாய், 7 டிசம்பர், 2010

சீனாவைச் சேர்ந்த மூதாட்டியொருவருவர் தன்னுடைய 82 வயதில் மிகச்சிறந்த குங்பூ வீராங்கனையாக விளங்குகிறார். அவரது குங்பூ திறமையை பார்த்து ரசிகர்கள் மெய்சிலிர்த்துப்போயுள்ளனர்.

ஸாவோ யூபாங் என்ற மூதாட்டியே தனது 82 வயதிலும் குங்குபூ கலையில் தனது திறமையை காண்பித்து வருகிறார். சீனாவின் தலைநகரமான பீஜிங்கில் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள பூங்காவில் அவர் ஒவ்வொரு நாளும் குங்பூ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றார்.
அவர் குங்பூ, தாய், ச்சி போன்றவற்றில் மாஸ்டராக விளங்குவதுடன் கடந்த 70 வருடங்களாக யோகாசனக் கலையையும் பயின்று வருகிறார்.
'நான் எப்போதும் சாதாரண வாழ்க்கையே வாழந்து வந்தேன். நான் மாமிசம் உண்பதை தவிர்த்து நீண்ட காலமாகிவிட்டது. அவை என்ன சுவையில் இருக்கும் என்பதுக் கூட எனக்கு மறந்துப் போய்விட்டது. நான் ஒவ்வொரு நாளும் 3 மணித்தியாலங்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்வேன்' என்று அவர் விபரித்துள்ளார்.
'நான் சிறுமியாக இருக்கும் போது எனக்கு குங்பூ கலையை கற்பித்துக் கொடுப்பதற்கு ஆசிரியர் எவரும் இருக்கவில்லை. எனவே நான் சுயமாகவே அதைக் கற்றுக் கொண்டேன். மற்றும் நான் பாடசாலைக்கு மீண்டும் செல்லும்போது குங்பூ ஆசிரியரையே தோற்கடித்தேன். அவர் என்னைப்பார்த்து ஆச்சர்யப்பட்டார்' என்று ஸாவோ யூபாங் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr