இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நத்தாரை முன்னிட்டு முன்னாள் போராளிகள் 98 பேர் விடுதலை

JKR  வெள்ளி, 24 டிசம்பர், 2010

த்தார் தினத்தை முன்னிட்டு புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியிருந்த முன்னாள் புலி சந்தேக நபர்கள் 98பேர் நாளை காலை சனிக்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனர் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

வவுனியா நகர சபை கலாச்சார மண்டபத்தில் நடைபெறும் வைபவத்தில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டு பெற்றோர்கள் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்படுவர்.
இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் 1983ஆம் ஆண்டு கால பகுதியின் பின்னர் வன்செயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடுகள் வழங்கும் வைபவத்தில் உரையாற்றியபோது மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
இந்த வைபவத்தில் மனிதவள அபிவிருத்தி அமைச்சர் டியூ குணசேகர மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர். 500பேர் நட்டஈட்டுக்குரிய காசோலைகளை அமைச்சிடமிருந்து பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr