இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பூஜாபிட்டிய பகுதியில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு

JKR  ஞாயிறு, 12 டிசம்பர், 2010

பூஜாபிட்டிய, அங்கும்புறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டப்புவ எனுமிடத்தில் காட்டுப் பிரதேசத்தில் பொலிஸார் நேற்று இரவு நடாத்திய தேடுதலின் போது கற்பாறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு தொகை ஆயுதங்களை கண்டெடுத்துள்ளனர்.

பொலிஸார் கண்டெடுத்த ஆயுதங்களுள் இரண்டு அதி சக்தி வாய்ந்த குண்டுகள், ஒரு சயனயிட் வில்லை, அதி சக்தி வாய்ந்த டீ.என்.டீ. ரக வெடிப்பொருட்கள் டீ.56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படத்தப்படும் 50 தோட்டாக்களும் உள்ளடங்கும்.
நேற்று இப்பிரதேசத்திலிருந்து குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் நடாத்திய தேடுதலின் போதே இவ்வாயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இக்காட்டுப் பகுதியில் மேலும் ஆயதங்கள் மறைத்து வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
இது விடயமாக அங்கும்புறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித இலங்கசேகர தலமையில் விசாரணைகள் நடை பெருகின்றன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr