இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நம்முடைய பிரதேசங்களை ஆளுகின்றவர்களாக நாம் இருக்க தயாராகவேண்டும் -பிரதியமைச்சர் முரளிதரன்

JKR  வெள்ளி, 17 டிசம்பர், 2010

ம்முடைய பிரதேசங்களை ஆளுகின்றவர்களாக நாம் இருப்பதற்காக தேர்தல் ஆண்டாக அமையப்போகின்ற அடுத்த ஆண்டை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மகிழவட்டவானில் மின் விநியோகத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதியமைச்சர் மேலும் உரையாற்றுகையில், பிரதேச சபைத் தேர்தல்கள் அடுத்த வருடம் நடைபெறவுள்ளன. அதன்போது நம்முடைய அரசாங்கத்தின் பிரதிநிதிகளை தெரிவுசெய்து நம்முடைய பலத்தை வெளிக்காட்டவேண்டும். அப்போதுதான் நமக்காக அபிவிருத்திகளை அதிகமாக பெற்றுக்கொள்ளமுடியும்.
நம்முடைய பிரதேசங்களை ஆளுகின்றவர்களாக நாம் இருப்பதற்கான வேலைகளை செய்யாது பிழையானவர்களுக்கு வாக்களிப்பதனால் பயன் கிடைக்காது. அம்பாறை மாவட்டம் அதன் பிரதிபலிப்பை அனுபவித்துவருகின்றது.
இருந்தாலும் இனிமேலும் இவ்வாறான தவறுகளை நாம் செய்யக்கூடாது. என்னுடைய முயற்சிகள் காரணமாக தடுப்புமுகாம்களில் வாடிவரும் இளைஞர்கள் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டுவருகின்றார்கள். விரைவில் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிடுவர். அதற்குரிய நம்பிக்கைகளை அரசாங்கத்திற்கு ஏற்படுத்த வேண்டியவர்கள் மக்களே என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr