இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மட்டக்களப்பு விபத்தில் புலி மரணம்

JKR  வெள்ளி, 10 டிசம்பர், 2010

ட்டக்களப்பு கல்முனை நெடுஞ்சாலையின் களுவாஞ்சிக்குடி நாகதம்பிரான் கோயிலுக்கு அருகில் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் புலியொன்று உயிரிழந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இருவர் புலியின் மீது மோதுண்டதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
உயிரிழந்த புலியை களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு பொதுமக்களின் உதவியுடன் பொலிஸார் எடுத்துச்சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு காட்டுப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் படுவான்கரைப் பகுதியிலிருந்து இந்தப் புலி வந்திருக்கக் கூடும் எனவும் அப்பகுதி மக்கள் இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr