ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் பிரதான பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கம் பற்றிய பொது கண்காணிப்பக்களில் முக்கிய மாற்றங்கள் எற்படலாம் என்றும் பற்றிசியாவினால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா, பிரதான பிரச்சினைகளில் முக்கியமான வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். இவரது அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் அது ராஜபக்ஷ அரசாங்கத்தை விட துரிதமாக இயங்கும்.
இருப்பினும், தேர்தலுக்கு அப்பால் பிரச்சினைக்குரிய விடயங்கள் இரு பகுதியினரையும் பொறுத்தளவில் ஒன்றாகத்தான் உள்ளது.
எந்த அரசாங்கமாக இருப்பினும் முன்னேற்றம் தொடருமென எதிர்ப்பார்க்கிறோம் என்றும் அவர் தனது கேபிளினூடாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார் என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக