இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

காணும் பொங்கலில் சென்னையில் மீனவர்கள் பயங்கர மோதல்: 2 பேர் பலி

JKR  செவ்வாய், 18 ஜனவரி, 2011

சென்னை பெசன்ட் நகரில் இரு பிரிவைச் சேர்ந்த மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பெசன்ட்நகர் கடற்கரையில் நேற்று காணும் பொங்கலையொட்டி மாலையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
அப்போது பெசன்ட்நகர் மீனவர் குப்பத்தை சேர்ந்த ஆஸ்கர் என்பவரை திடீர் நகரை சேர்ந்த மாதவன் என்பவரும் அவரது நண்பர்களும் கிண்டல் செய்துள்ளனர்.
இதையடுத்து ஆஸ்கர் தனது மாமா சிலம்பரசன் மற்றும் சிலருடன் இரவு 11 மணிக்கு திடீர் நகருக்கு வந்து மாதவனுடன் வாக்குவாதம் செய்தார்.
அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. மாதவனுக்கு ஆதரவாக திடீர் நகரை சேர்ந்தவர்கள் திரண்டனர். சிலம்பரசனுக்கு ஆதரவாக பெசன்ட்நகர் ஓடை மாநகரை சேர்ந்தவர்கள் திரண்டனர். இரு தரப்பினரும் அரிவாள், உருட்டுகட்டைகளுடன் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
இதில் பலத்த காயமடைந்த மாதவன், சிலம்பரசன், தீபக் ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மாதவனும், சிலம்பரசனும் இறந்தனர். இரு தரப்பிலும் தலா ஒருவர் கொலையுண்டதும் பதற்றம் மேலும் அதிகரித்து மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு மீண்டும் பெரும் மோதலில் ஈடுபட்டனர்.
உடனடியாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு மோதல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் மீனவர் குப்பங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
இந்த மோதல் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 14 பேரை போலீசார் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr