இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வெள்ளைக்கொடி வழக்கில் கொழும்பு முன்னாள் நீதவான் சாட்சியம்

JKR  புதன், 12 ஜனவரி, 2011

ரத் பொன்சேகா மற்றும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முன்னாள் கொழும்பு பிரதம நீதிபதி சம்பா ஜானகி ராஜரட்ன சாட்சியமளித்தார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுடனான பேட்டியின் குறிப்புக்களை பிரெட்ரிகா ஜேன்ஸ் பதிவு செய்திருந்த குறிப்பு புத்தகத்தை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்ட போது இருந்த மாதிரி இப்போது இல்லை என அவர் கூறினார்.
அதில் இரண்டு பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளன. கிழித்ததற்கான அடையாளமாக ஓர் அங்குல அகலமான கடதாசி மீதி உள்ளது என அவர் கூறினார்.
பிரெட்ரிகா ஜேன்ஸின் சட்டத்தரணி என்.எம்.சஹீட், சிரஸ செய்தி வாசிப்பாளர் ஓமாயா மடவெல விதானகே, புலனாய்வு பொலிஸ் பிரிவை சேர்ந்த டப்ளியூ.பி.எஸ்.ஐ.அபேரட்ன, உயர் நீதிமன்ற பதிவாளர் ஆகியோரும் சாட்சியமளித்தனர்.
குறித்த வழக்கு நாளை வியாழக்கிழமையும் தொடரவுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr