இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புலிகளின் உள் விவகாரத்தில் தலையிடமாட்டேன் எனத் தெரிவித்த ரணில்: விக்கிலீக்ஸ்

JKR  வியாழன், 13 ஜனவரி, 2011

மிழீழ விடுதலைப் புலிகளின் உள்விவகாரத்தில் தான் தலையிட மாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நோர்வே அரசிடம் உறுதியளித்தார் ஏன விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தராக செயற்பட்டவரும் தற்போதைய மீள்குடியேற்றத் துறைப் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் புலிகளுக்கும் இடையிலான பிரச்சினைகளில் தான் தலையிட மாட்டேன் என்று அன்று பிரதமராக இருந்த ரணில் நோர்வேயின் இலங்கைக்கான சமாதானத் தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்மிடம் உறுதியளித்துள்ளார் என்றும் அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரிலொண்ஸ்டட் மற்றும் எரிக்சொல்ஹெய்ம் ஆகிய இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்ட சு.ப. தமிழ்ச்செல்வனை புலிகளின் வன்னி மாவட்டத் தலைமையகத்தில் வைத்து சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr