இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சங்கானை மத்தி பகுதியில் குடியிருப்போருக்கு காணிகளைப் பகிர்ந்தளிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை.

JKR  சனி, 22 ஜனவரி, 2011

லிகாமம். மேற்கு சங்கானை மத்தி ஜே 181 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நீண்டகாலமாக வசித்துவரும் குடியிருப்பாளர்களின் வேண்டுகோளின் பேரில் அவர்களது காணிப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு நேரடியாக விஜயம் செய்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஏற்கனவே அக்குடியிருப்பு மக்கள் பிரதிநிதிகள் கடந்த 18ம்திகதி அமைச்சர் அவர்களது யாழ். பணிமனைக்கு வருகை தந்து தமது கோரிக்கையினைத் தெரியப்படுத்திய நிலையில் இன்றைய தினம் அப்பகுதிக்கு விஜயம் செய்தார்.

இங்கு நடைபெற்ற சந்திப்பில் பிரதேச செயலாளரினால் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இங்கு குடியிருப்போரில் ஏற்கனவே அனுமதிப் பத்திரம் உள்ளோர் 2006ம் ஆண்டிற்குப் பின்னர் அங்கு குடியேறியோர் வேறு பகுதியில் சொந்த காணி உள்ளோர் சொந்தக் காணியில் வீடுகள் உள்ளோர் மற்றும் அனுமதிப் பத்திரம் இன்றி குடியிருப்போர் ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். இதனடிப்படையில் ஏற்கனவே அனுமதிப் பத்திரம் உள்ளோருக்கும் 2006ம் ஆண்டிற்குப் பின்னர் குடியேறியோருக்கும் முன்னுரிமை அடிப்படையில் காணியினைப் பகிர்ந்தளித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு தெரிவித்தார்.

மேலும் அக்குடியிருப்பாளர்களின் கோரிக்கையின் பேரில் பாதி கட்டப்பட்டுள்ள சனசமூக நிலையம் பூரணப்படுத்தப்படும் எனவும் மின்சார வசதி மற்றும் வீதி திருத்தம் என்பன கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சரவர்கள் குடியிருப்பாளர்களிடம் உறுதியளித்தார்.

மேற்படி சந்திப்பின்போது வலி.மேற்கு பிரதேச சபைச் செயலாளர் புத்திசிகாமணி வலிகாமம் பிரதேச ஈபிடிபி இணைப்பாளர் ஜீவன் வலி.மேற்கு முன்னாள் பிரதேச சபைத் தலைவரும் வலி.மேற்கு ஈபிடிபி அமைப்பாளருமான வள்ளுவன் மகேந்திரன் ஆகியோருடன் அனைத்து குடியிருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.







0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr