இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழ்.நகர மத்தியில் அமைக்கப்பட்டுள்ள அங்காடி பழக்கடைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பழவியாபாரிகளிடம் கையளித்தார்.

JKR  வியாழன், 20 ஜனவரி, 2011

கர அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஓர் கட்டமாக யாழ்.நகரில் அகற்றப்பட்ட நடைபாதை பழவியாபாரிகளுக்கென புதிதாக அமைக்கப்பட்ட அங்காடி வியாபார கடைப்பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பழவியாபாரிகளிடம் கையளித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றுகாலை அமைச்சரவர்களின் யாழ்.பணிமனைக்கு வருகை தந்த பழக்கடை சங்கத் தலைவர் சு.ஜெகராஜசிங்கம் செயலாளர் மா.விஜயசெல்வம் தலைமையிலான அனைத்து அங்காடி பழவியாபாரிகளுடனும் கலந்தரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ்.மாநகரசபைக்கும் பழவியாபாரிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை தெளிவுபடுத்தினார். மேலும் அவர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சரவர்கள் கடைகளைப் பெற்றுக்கொள்ளவுள்ள பழவியாபாரிகள் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் எனத்தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பழவியாபாரம் மேற்கொள்ளப்படும் இடத்தை சுத்தமாக பேணவேண்டும். வியாபாரம் செய்யும் இடத்தில் நீங்களும் மரியாதையாக நடந்து உங்களையும் மரியாதையாக நடத்தும் வண்ணம் ஒழுக்கத்தைப்பேண வேண்டும். பொதுமக்கள் உங்களிடத்தில் விரும்பிவரவேண்டும். உங்களது வாழ்க்கைத்தரம் உயர வேண்டும். மேலும் எந்தக்காரணம் கொண்டும் பழவியாபாரிகளுக்கு வழங்கப்படும் அங்காடிக்கடைகள் கைமாற்றக்கூடாது எனக்கேட்டுக்கொண்ட அமைச்சரவர்கள் சுரண்டலில் இருந்து பழவியாபாரிகளைப் பாதுகாப்பதற்காக இலகு வங்கிக் கடனை பெற்றுக்கொடுக்க தான் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் பழவியாபாரிகளுக்கு உறுதியளித்தார்.
இச்சந்திப்பின் இறுதியில் எவ்வித பாரபட்சமும் இன்றி அங்காடி கடைகளை ஒதுக்கீடு செய்வதற்காக லொத்தர் முறை அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமது பணிமனையிலிருந்து அனைவருடனும் யாழ்.மத்திய பஸ் நிலையப்பகுதிக்கு புறப்பட்டார்
பஸ் நிலையப்பகுதியில் பழக்கடைகளுக்கென ஒதுக்கப்பட்ட அங்காடி பகுதியில் அமைச்சரவர்களினால் வழங்கப்பட்ட லொத்தர் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்ட பழவியாபாரிகள் தமக்குரிய கடைகளைத் தாமே தெரிவுசெய்துகொண்டனர். இச்சமயம் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆணையாளர் மு.சரவணபவ மாநகர பதில் செயலாளர் இரத்தினசிங்கம் பொறியியலாளர் ஹென்ஸ்டன் வழக்கறிஞர் ரங்கன் ஆகியோர் உட்பட பெருமளவிலான வியாபாரிகளும் உடனிருந்தனர்.










0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr