இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஈழத் தமிழர்களை அழித்த காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது-வைகோ

JKR  புதன், 26 ஜனவரி, 2011

ழத் தமிழர்களை அழித்த காங்கிரஸ் கட்சிக்கு மன்னிப்பு கிடையாது. இலங்கை ராணுவம் மிருகத்தை விட கொடூரமானது. தமிழர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். ராஜபக்சே மற்றும் அவரது கூட்டத்தை அழிக்கும் காலம் கட்டாயம் வரும் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.


புதுச்சேரியில் மாநில மதிமுக சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில்,
காமராஜர் முதலமைச்சர் பதவியை விரும்பவில்லை. முதலமைச்சர் பதவி அவரை தேடி வந்தது. முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்து விட்டு, மக்களுக்கு பாடுபட சென்றவர். அண்ணா மாதிரி தமிழ்பற்று உடையவர்கள் யாரும் இல்லை. அண்ணா கண்ட கனவை நிறை வேற்ற ம.தி.மு.க. பாடுபட்டு வருகிறது.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி நல்ல மனிதர். வரும்வழியில் அவரை சந்தித்து விட்டு தான் வருகிறேன் காங்கிரஸ் கட்சி அழிந்து வருகிறது.
ஈழ தமிழர்களை அழித்த காங்கிரஸ் கட்சிக்கு மன்னிப்பு கிடையாது. காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்த ரங்கசாமியை நான் பாராட்டுகிறேன். அவர் நல்ல முடிவு எடுத்து இருக்கிறார்.
இலங்கை ராணுவம் மிருகத்தை விட கொடூரமானது. தமிழர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். ராஜபக்சே மற்றும் அவனது கூட்டத்தை அழிக்கும் காலம் கட்டாயம் வரும். சுமார் 30 வருடமாக சிங்கள கடற்படை, தமிழக மீனவர்களை தாக்கி வருகிறது. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. 500 மீனவர்களை கொன்று இருக்கிறது. 1000 பேரை சிங்கள கடற்படை தாக்கி இருக்கிறது.
நமது கடற்படை இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது. பிரபாகரன் போன்று உலகில் எந்த வீரனும் கிடையாது. தரைப்படை, கடற்படை, வான்படை அமைத்து போர் நடத்தியவர் பிரபாகரன். சிங்களம், இந்திய அரசு விடுதலைபுலிகளை அழித்து விட்டோம் என்று நினைக்க வேண்டாம்.
தற்போது முதலமைச்சர் என்பதை விட தி.மு.க. தலைவர் என்ற முடிவிற்கே விரைவில் வருவேன் என்று கருணாநிதி அறிவித்து இருக்கிறார். என்ன அருமையான நாடகம். இது போன்ற விஷயத்தில் அவருக்கு நிகர் அவர் தான். ஒரு மகனுக்கு துணை முதல்வர் பதவி. மற்றொரு மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி. அவர்களது குடும்பம் போன்று யாரும் ஒற்றுமையாக இருக்க முடியாது என்றார் வைகோ.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr