இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வடமராட்சியில் சம்பவம்: யுவதிக்கு காதல் எஸ்.எம்.எஸ்.அனுப்பிய இளைஞனுக்கு துரத்தித் துரத்தி வாள்வெட்டு…???

JKR  வியாழன், 6 ஜனவரி, 2011

16 வயது யுவதி ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசியில் காதல் எஸ்.எம்.எஸ்.அனுப்பியதால் 20 வயது இளைஞர் ஒருவர் அந்த யுவதியின் சகோதரர்களீனால் துரத்தித் துரத்தி வெட்டப்பட்ட சம்பவம் ஒன்று வடமராட்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது
.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;

புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அப்பகுதி யுவதி ஒருவருக்கு காதல் “எஸ்.எம்.எஸ்.’ அனுப்பியுள்ளதை அறிந்த அந்த யுவதியின் சகோதரர்கள் அந்த கையடக்கத்தொலைபேசி இலக்கத்திற்குரிய இளைஞரைப் பிடித்து வாளினால் வெட்ட முற்பட்டபோது அவ்விளைஞன் அவர்களிடமிருந்து தப்பியோடியுள்ளார்.
ஆயினும் அவர்கள் அந்த இளைஞனை மடக்கிப்பிடித்து அவரைத் தாக்கியுள்ளனர். அப்போது அவர் தப்பியோட முயற்சித்த வேளை அவரைக் கலைத்து கலைத்து அவர்கள் வாளினால் வெட்டியுள்ளனர்.
இதனால் கையில் படுகாயமடைந்த அந்த இளைஞன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். இவரும் அதே இடத்தைச் சேர்ந்தவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr