இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ரஜினிக்காக அக்ஷய் குமாருக்கு தீபிகா 'நோ'

JKR  செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

!

ஜினியின் அடுத்த படமான ராணாவில் நடிப்பதற்கு கால்ஷீட் தர வசதியாக, தான் அடுத்து அக்ஷய் குமாருடன் நடிப்பதாக இருந்த படத்தைக் கூட மறுத்துள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.

தென்னக சூப்பர் ஸ்டாராக இருந்து, இப்போது இந்திய சூப்பர் ஸ்டாராகவும், உலக அளவில் அறியப்பட்ட இந்திய நாயகனாகவும் மாறியுள்ள ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே இன்றைய இளம் நடிகைகளின் ஆசையாக உள்ளது.
பிரபல பாலிவுட் நாயகி தீபிகா படுகோனும் இதற்கு விலக்கல்ல. கடந்த இரு ஆண்டுகளாகவே அவர் ரஜினி பட வாய்ப்புக்காக காத்திருந்தார்.
இந்த நிலையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கும் ரஜினியின் புதிய படமான ராணாவில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடிவந்தது. ஆனால் அந்த நேரம் பார்த்து அவரிடம் கால்ஷீட் இல்லை. ரஜினி படத்தை தவற விடவும் மனமில்லை.
கடைசியில் அக்ஷய் குமாருடன் தான் நடிக்கவிருந்த ஒரு படத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு, ரஜினி படத்துக்கு கால்ஷீட் தரத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் தீபிகா!
இப்படத்தில் ரஜினியின் இன்னொரு நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr