இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

முத்தமிட்டு சாதனை படைத்த தாய்லாந்து ஜோடிகள்

JKR  செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

தாய்லாந்தைச் சேர்ந்த ஜோடிகள் சுமார் 46 மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் 9 செக்கன்கள் வரை முத்தங்கொடுத்து சாதனை படைத்துள்ளனர்.

பேங்கொக்கைச் சேர்ந்த எக்காச்சி மற்றும் லக்ஸான டிரானா ரெட் ஆகியோரே இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களாவர்.
காதலர் தினத்தினை ஒட்டி நடத்தப்பட்ட இப்போட்டி நிகழ்சியானது கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணியளவில் பட்டாயா நகரில் ஆரம்பமாகியது.
சுமார் 14 ஜோடிகள் இதில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிபெற்ற ஜோடிக்கு 1600 அமெ.டொலர் பெறுமதியான வைர மோதிரமும், 3200 அமெ.டொலர் பெறுமதியான பணப்பரிசிலும் வழங்கப்பட்டன.
போட்டியில் பங்குபற்றிய பெண்ணொருவர் போட்டி ஆரம்பமாகி 1/2 மணித்தியாலயத்திற்குள்ளேயே மயங்கி விழுந்தார்.
இதற்கு முன்னர் ஜேர்மனியைச் சேர்ந்த தம்பதிகள் கடந்த 2009 ஆம் ஆண்டு 32 மணித்தியாலங்கள் முத்தம் கொடுத்தமையே சாதனையாக கின்னஸ் சாதனையாக உள்ளது.
இந்நிலையில் இவர்களது சாதனையை கின்னஸ் புத்தகத்தில் பதிய வேண்டுமாயின் கின்னஸ் அதிகாரிகள் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr